வழிபாடு
வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை

Published On 2022-04-23 06:41 GMT   |   Update On 2022-04-23 06:41 GMT
பக்தர்கள் சிவகங்கை மாவட்டம், கீழசேவல்பட்டியில் இருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.
மயிலாடுதுறையில் வைத்தீஸ்வரன்-தையல்நாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சித்திரை மாதத்தின் முதல் வாரத்தில் பக்தர்கள் விரதம் இருந்து சித்ரா பவுர்ணமிக்கு பின் பாதயாத்திரை செல்வது வழக்கம். அதன்படி பக்தர்கள் நேற்றுமுன்தினம் சிவகங்கை மாவட்டம், கீழசேவல்பட்டியில் இருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.

பாதயாத்திரையின் போது மாட்டுவண்டியில் தங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சமைப்பதற்கு தேவையான பொருட்களுடன் செல்வது வழக்கம். இந்த பாதயாத்திரை கீழசேவல்பட்டியில் தொடங்கி திருமயம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், மாயவரம், வழியாக வருகிற செவ்வாய்க்கிழமை வைத்தீஸ்வரன் கோவில் சென்றடையும். இந்த பாதயாத்திரை குழுவினர் நேற்று புதுக்கோட்டை வந்தடைந்தனர்.

அப்போது பக்தர்களுக்கு பழம், குடிப்பதற்கு தண்ணீர், குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் கொடுத்தனர். மேலும் சிலர் சற்று வித்தியாசமாக மாட்டுவண்டியில் வரும் மாடுகளுக்கு வைக்கோல் போன்ற பொருட்களும் கொடுத்தனர். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பாதயாத்திரை நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது பாதயாத்திரைக்கு செல்பவர்களின் கூட்டம் அதிகமாகவே இருந்தது. மேலும் பா.ஜ.க. நட்சத்திர பிரதிநிதியும், திரைப்பட நடிகையுமான கவுதமி  பாதயாத்திரை பக்தர்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்.
Tags:    

Similar News