வழிபாடு
பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

புணவாசிப்பட்டி மகா மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

Published On 2022-04-23 11:19 IST   |   Update On 2022-04-23 11:19:00 IST
புணவாசிப்பட்டி மகா மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், லாலாபேட்டை அருகே  புணவாசிப்பட்டியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழா  தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள்  காவிரி ஆற்றில் இருந்து குதிரையுடன், தீர்த்தக்குடம் மற்றும் பால்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. அன்று இரவு 9 மணிக்கு தேர் நத்தம் என்ற இடத்திற்கு சென்றபிறகு, அம்மன் கரகம் பாலித்தல், குதிரை குலுக்குதல், மாவிளக்கு எடுத்தல், வானவேடிக்கையும் நடக்கிறது.

நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், பொங்கல் வைத்தல், படுகளம், சூளாடு சரங்குத்துதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கிடா வெட்டு பூஜை, கம்பம் விடுதல், மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Similar News