வழிபாடு
மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிபடும் அரிய நிகழ்ச்சி

மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிபடும் அரிய நிகழ்ச்சி

Published On 2022-04-23 05:10 GMT   |   Update On 2022-04-23 05:10 GMT
காலை 7.15 மணி முதல் 7.45 மணி வரை கோவில் கருவறையில் உள்ள மூலவர் தேனுபுரீஸ்வரர் பின்புறமுள்ள கபிலநாதர் லிங்கத்தின்மீது சூரிய ஒளிபடும்.
சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் பழமையான தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. வருடந்தோறும் சித்திரை மாதத்தில் 3 நாட்கள், நவகிரகங்களில் தலைமை கிரகமான சூரிய பகவான், இந்த கோவிலில் உள்ள கபிலநாத சாமியை வழிபடும் அரிய நிகழ்வு நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டு சித்திரை மாதம் நடைபெறும் அரிய நிகழ்வு நேற்று தொடங்கியது. இன்று மற்றும் நாளை என இந்த 3 நாட்களிலும் காலை 7.15 மணி முதல் 7.45 மணி வரை கோவில் கருவறையில் உள்ள மூலவர் தேனுபுரீஸ்வரர் பின்புறமுள்ள கபிலநாதர் லிங்கத்தின்மீது சூரிய ஒளிபடும். மற்ற நாட்களில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிபடாது.

சூரியன் தனது ஒளியால் சிவலிங்கத்தை வழிபடும் இந்த அரிய நிகழ்ச்சிக்கு ‘பாஸ்கர தரிசனம்’ என்று பெயர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால், இளநீர் ஆகியவற்றால் கபிலநாத சாமிக்கு அபிஷேகம் செய்து சூரிய ஒளி கிரகணங்களோடு சிவ லிங்கத்தை தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News