வழிபாடு
திருப்பதியில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதியில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்

Published On 2022-02-21 14:06 IST   |   Update On 2022-02-21 14:06:00 IST
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி வரை 10 நாட்கள் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி வரை 10 நாட்கள் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி நேற்று அதிகாலை சுப்ர பாதம், அபிஷேகம் நடந்தது.

காலை 11.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது. கோவிலில் உள்ள கருவறை, கொடிமரம், பல்வேறு சன்னதிகள், கோவில் வளாகம், மேற்கூரை, தூண்கள், மாடங்கள் மற்றும் பூஜைக்கு பயன்படுத்தும் பித்தளை, தாமிர பாத்திரங்கள், இதர பொருட்கள் ஆகியவற்றை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்தனர். அதன் பிறகு மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம், நைவேத்தியம் நடந்தது. அதில் பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கோவில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சியில் கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், உதவி அதிகாரி சத்ரேநாயக், கோவில் கண்காணிப்பாளர் பூபதி மற்றும் ஊழியர்கள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News