வழிபாடு
திருப்பதி

ஏழுமலையானை தரிசிக்க 5 நாட்கள் காத்திருக்கும் இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள்

Published On 2022-02-21 09:03 IST   |   Update On 2022-02-21 10:59:00 IST
சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று, 48 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்று விவரங்களை உடன் கொண்டு வர வேண்டும்.
திருப்பதி ஏழுமலையானை வழிபட இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரண பக்தர்களுக்கு திருப்பதியில் சீனிவாசம் தங்கும் விடுதி, ரெயில் நிலையம் அருகில் உள்ள கோவிந்தராஜசாமி சத்திரம், அலிபிரி டோல் கேட் பகுதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் நேரடியாக தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சமீப காலமாக இலவச தரிசனத்தில் சென்ற சாதாரண பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. தற்போது நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது. பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் அவர்கள் சாமி தரிசனம் செய்யவும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர் ஒருவர், திருமலைக்கு வந்து ஏழுமலையானை வழிபட குறைந்தபட்சம் 4, 5 நாட்கள் ஆகிறது. எனவே திருமலைக்கு வரும் பக்தர்கள் தேவஸ்தான நடைமுறையை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று, 48 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்று விவரங்களை உடன் கொண்டு வர வேண்டும்.

மேலும் சாமி தரிசனம் செய்ய திருப்பதிக்கு வந்து, முழு விவரம் தெரியாமல் பக்தர்கள் சிரமப்பட வேண்டாம். இதை, பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்றார்.

Similar News