வழிபாடு
காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்டம்: ‘கோவிந்தா’ கோஷம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்தனர்
மேலும் ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாத பெருமாளை தேரில் வீற்றிருந்து பவனி, வருவதை காண பொதுமக்கள், பக்தர்கள் உயரமான இடங்களிள் முன்கூட்டியே இடம் பிடித்து நின்று தரிசித்தனர்.
காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து தினசரி இரவு உற்சவர் அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதை தொடர்ந்து கருடசோவையும் நடைபெற்றது. 15-ந் தேதி ஸ்ரீ பெட்டத்தம்மன் மலையில் இருந்து பெட்டத்தம்மன் அழைப்பு நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம்
16-ந்தேதி அதிகாலை திருக்கல்யாண உற்சவமும், இரவு 8 மணிக்கு யானை வாகன உற்சவமும் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் தேருக்கு எழுந்தருளினார். தேரில் வீற்றிருந்த அரங்கநாத பெருமானை தரிசிக்க பக்தர்கள் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி கும்பிட்டு சென்றனர். மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. கோவில் நிர்வாகம் சார்பாக ஊர்பிரமுகர்கள் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதனையடுத்து மாலை 4.25 மணிக்கு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் செந்தில் வேலவன், உதவி ஆணையர் விஜயலட்சுமி, கேட்டாட்சியர் ரவிசந்திரன், மேட்டுப்பாளையம் துணைபோலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், மேட்டுப்பாளையம் தாசில்தார் ரமேஷ் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.இதை தொடர்ந்து தேர்நிலைத் திடலில் இருந்து புறப்பட்டது.தேரின் முன்னும், பின்னும் ஏராளமான பக்தர்கள் ரங்கா, கோவிந்தா, என்று எழுப்பியகோஷங்களுடனும், தாசர்களின் சங்கொளியும் விண்ணை அதிரவைத்தது. தேர் நான்கு ரத வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்து இரவு தேர் நிலைத் திடலை அடைந்தது.
மேலும் ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாத பெருமாளை தேரில் வீற்றிருந்து பவனி, வருவதை காண பொதுமக்கள், பக்தர்கள் உயரமான இடங்களிள் முன்கூட்டியே இடம் பிடித்து நின்று தரிசித்தனர். காரமடை அரங்கநாத பெருமாள் தேரோட்டத்தை ஒட்டி பல்வேறு அமைப்புகள் சார்ப்பாக பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.தேரோட்டத்தை ஒட்டி காரமடை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.