வழிபாடு
கோவிந்தராஜசாமி கோவில்

கோவிந்தராஜசாமி கோவிலில் தெப்போற்சவம் தொடக்கம்

Update: 2022-02-11 06:31 GMT
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் நேற்று தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது. கொரோனா தொற்று பரவலால் கோவில் உள்ளேயே தெப்போற்சவம் நடக்கிறது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் நேற்று தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது. கொரோனா தொற்று பரவலால் கோவில் உள்ளேயே தனிமையில் தெப்போற்சவம் நடக்கிறது. முதல் நாளான நேற்று உற்சவர்களான சீதா, கோதண்டராமர், லட்சுமணருக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், தேன், நெய் மற்றும் பிற வாசனை சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

தெப்போற்சவத்தில் கோவில் சிறப்பு நிலை துணை அதிகாரி பார்வதி, உதவி அதிகாரி துர்கராஜூ, கண்காணிப்பாளர் ரமேஷ்குமார், கோவில் ஆய்வாளர்கள் ஜெயக்குமார், முனிரத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News