வழிபாடு
திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவில்

திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல 5-ந்தேதி முதல் அனுமதி

Published On 2022-02-04 10:30 IST   |   Update On 2022-02-04 10:30:00 IST
வருகிற 5-ந் தேதி (சனிக்கிழமை) முதல் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
களக்காடு வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 27-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கடந்த 27-ந் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி முடிவடைவதை முன்னிட்டு, வருகிற 5-ந் தேதி (சனிக்கிழமை) முதல் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்படும் என்றும், அன்று முதல் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.

இதேபோல் திருக்குறுங்குடி வனப்பகுதிக்கு சுற்றுலா செல்லவும் அனுமதி வழங்கப்படுகிறது.

Similar News