வழிபாடு
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேம் நடைபெற உள்ளது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கியது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்த திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.
இதையொட்டி கடந்த 27-ந்தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து, 31-ந்தேதி சாந்தி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.
நேற்று முன்தினம் காலை கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் முடிவடைந்தவுடன் சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க விருத்தாசலம் மணிமுக்தாற்றில் இருந்து யாகசாலை பூஜைக்கு யானைகளில் தீர்த்தம் கொண்டு வந்தனர்.
நேற்று காலையில் பரிவார கலசங்களுக்கு கலாகர்ஷணம், பஞ்சமூர்த்தி பூஜைகளும் நடைபெற்று, பின்னர் மாலையில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
யாகசாலை பூஜையை திருக்கைலாய பரம்பரை தருமை ஆதீனம்26-வது குரு சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.
அப்போது பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, சண்டிகேஸ்வரர் மற்றும் ஹோம குண்டங்களில் வைக்கப்பட்டுள்ள பூரண கும்பங்களுக்கு மகா தீபாராதனை நடந்தது.
முன்னதாக ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைக்கு பூரண கும்பங்களை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
தொடர்ந்து யாகசாலையில் கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் நடந்து முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு 3-ம் காலம், நாளை(சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு 4-ம் காலம், மாலை 5 மணிக்கு 5-ம் காலம் யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது.
தொடர்ந்து நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) காலை 4 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜையும், 5 மணிக்கு பரிவார யாகங்கள், பூர்ணாகுதி நடந்து பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
தொடர்ந்து 7 மணிக்கு பிரதான மூர்த்திகளுக்கு மகாபூர்ணாகுதி நடந்து, காலை 7.15 மணிக்கு கடம் புறப்பாடும், 8.15 மணிக்கு கோபுரங்கள், விமானங்களுக்கும், 8.30 மணிக்கு மூலமூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பின்னர் மாலை 4 மணிக்கு மகாஅபிஷேகமும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து வருகிற 8-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் மாசி மக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற இருக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டி குழு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.