வழிபாடு
திருப்பதி கபிலேஸ்வரர் கோவில்

திருப்பதி கபிலேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா 22-ந்தேதி தொடக்கம்

Published On 2022-02-03 15:20 IST   |   Update On 2022-02-03 15:20:00 IST
திருப்பதி கபிலேஸ்வரர் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா மாதம் 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 22  - ந்தேதியில் இருந்து மார்ச் மாதம் 3  - ந்தேதி வரை நடக்கிறது. பிப்ரவரி மாதம் 20  - ந்தேதி காலை 11.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. தூய்மைப்பணி முடிந்ததும் மாலை 3 மணியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

பிரம்மோற்சவ விழா வாகனச் சேவை விவரம் வருமாறு:  -

22  - ந்தேதி மாலை மீன லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது. இரவு ஹம்ச வாகனச் சேவை, 23  - ந்தேதி காலை சூரிய பிரபை வாகனச் சேவை, இரவு சந்திர பிரபை வாகனச் சேவை, 24  - ந்தேதி காலை பூத வாகனச் சேவை, இரவு சிம்ம வாகனச் சேவை, 25  - ந்தேதி காலை மகர வாகனச்சேவை, இரவு சேஷ வாகனச் சேவை, 26  - ந்தேதி காலை திருச்சி உற்சவம், அதிகார நந்தி வாகனச் சேவை, 27  - ந்தேதி காலை வியாக்ரா வாகனச் சேவை, இரவு யானை வாகனச் சேவை, 28  - ந்தேதி காலை கல்ப விருட்ச வாகனச் சேவை, இரவு குதிரை வாகனச் சேவை.

மார்ச் மாதம் 1  - ந்தேதி காலை தேரோட்டம் (போகி தெரு), இரவு நந்தி வாகனச் சேவை, 2  - ந்தேதி காலை புருஷா மிருக வாகனச் சேவை, மாலை சிவன்  - பார்வதி திருக்கல்யாண உற்சவம், இரவு திருச்சி உற்சவம், 3  - ந்தேதி காலை நடராஜர் ராவணாசூர வாகனச் சேவை, சூரிய பிரபை வாகனச் சேவை, திரிசூல ஸ்நானம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது. இத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

மேற்கண்ட வாகனங்களில் உற்சவர்களான சோமஸ்கந்தர், காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். அதில் பங்கேற்று வழிபட பக்தர்களுக்கு அனுமதியில்லை. கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து ஏகாந்தமாக நடக்கிறது.

Similar News