வழிபாடு
வழிவிடு வேல்முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

வழிவிடு வேல்முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2022-02-03 12:32 IST   |   Update On 2022-02-03 12:32:00 IST
வழிவிடுவேல்முருகன், வள்ளி, தெய்வானை மற்றும் விநாயகருக்கு பழங்களை கொண்டும், கரும்புச்சாறு, பால், இளநீர், திருநீறு, சந்தனம், ஜவ்வாது என்று பல்வேறு பொருட்களை கொண்டும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருச்சி ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோவிலுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்ட தினத்தையொட்டி பழனி பாதயாத்திரை குழுசார்பில் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.

இதையொட்டி வழிவிடுவேல்முருகன், வள்ளி, தெய்வானை மற்றும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமிக்கு கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, மாதுளை, சப்போட்டா உள்ளிட்ட பழங்கள் கொண்டும், கரும்புச்சாறு, பால், இளநீர், திருநீறு, சந்தனம், ஜவ்வாது என்று பல்வேறு பொருட்களை கொண்டும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பழனி பாதயாத்திரை குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News