வழிபாடு
பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு

பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு

Published On 2022-02-03 09:21 IST   |   Update On 2022-02-03 09:21:00 IST
கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சி, அத்தாழ பூஜை, தீபாராதனை ஆகியவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் அமாவாசை விழா கொண்டாடுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் தை அமாவாசை விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நேற்று முன்தினம் காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை, அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

அதைதொடர்ந்து தீபாராதனை, உஷபூஜை, ஸ்ரீ பலிபூஜை, நெய்வேத்திய பூஜை, உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 10 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன்வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சி, அத்தாழ பூஜை, தீபாராதனை ஆகியவை நடந்தது. விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

Similar News