வழிபாடு
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை

Published On 2022-02-03 08:41 IST   |   Update On 2022-02-03 08:41:00 IST
27-வது ஆண்டாக பொன்பரப்பி கிராம மக்கள் சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை அணிந்து 1 வார காலம் விரதம் இருந்து பொதுமக்களுக்கு அன்னதானம் அளித்தனர்.
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஆண்டுதோறும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து பாதயாத்திரை வருவது வழக்கம். அதேபோல் 27-வது ஆண்டாக பொன்பரப்பி கிராம மக்கள் சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை அணிந்து 1 வார காலம் விரதம் இருந்து பொதுமக்களுக்கு அன்னதானம் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து அம்மனை சரக்கு ஆட்டோவில் எழுந்தருளச் செய்து கரகம் பாலித்து சமயபுரத்திற்கு பாதயாத்திரை மேற்கொண்டனர். வழியில் புள்ளம்பாடியில் உள்ள குளுந்தாளம்மன் கோவிலில் தங்கி, வாய்க்கால் அருகே மடிப்பிச்சை நேர்த்திக்கடன் செலுத்தி, கோவிலில் பஜனை மற்றும் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

இதேபோல் புள்ளம்பாடி ஒன்றியத்தில் எம்.கண்ணனூர், மால்வாய், சாதூர்பாகம், மேலரசூர், ஒரத்தூர் மற்றும் அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை, காட்டுமன்னார்கோவில், உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் சமயபுரம் மாரியம்மனுக்கு மாலையணிந்து தினமும் ஏராளமானவர்கள் பாதயாத்திரையாக வந்தனர்.

Similar News