ஆன்மிகம்
சொர்ணாகர்ஷன பைரவர்

இடையார்பாளையம் நாணமேடு சொர்ணாகர்ஷன பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

Published On 2021-11-25 05:42 GMT   |   Update On 2021-11-25 05:42 GMT
இடையார்பாளையம் நாணமேடு சொர்ணாகர்ஷன பைரவர் கோவிலில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) தேய்பிறை மகேஸ்வராஷ்டமியை முன்னிட்டு ஏகாதச ருத்ர யாகம் நடக்கிறது.
அஷ்டமி என்பது எட்டாவது திதி நாள். அதிலும் தேய் பிறையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது. கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியை மகேஸ்வராஷ்டமி என்பர். இது பைரவரின் ஜென்மாஷ்டமி ஆகும். இதனை காலபைரவாஷ்டமி எனவும் அழைப்பர்.

புதுவை கடலூர் சாலை இடையார்பாளையம் மேற்கே நாணமேடு சப்தகிரி நகரில் உள்ள சொர்ணாகர்ஷன பைரவர் கோவிலில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) தேய்பிறை மகேஸ்வராஷ்டமியை முன்னிட்டு ஏகாதச ருத்ர யாகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு பைரவர், பைரவிக்கு சிறப்பு யாக பூஜைகள் தொடங்குகின்றன. மதியம் 1 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும், யாக பூஜை நிறைவும் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். அரசு அறிவுறுத்தலின்படி பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் வழிபாடு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News