ஆன்மிகம்
சமயபுரம் மாரியம்மன் கோவில்

கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2021-11-18 10:47 IST   |   Update On 2021-11-18 10:47:00 IST
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் க்தர்கள் முடிகாணிக்கை, குழந்தையை கரும்புத்தொட்டிலில் சுமந்து சென்றும், அக்னிச்சட்டி தூக்கி வந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். நேற்று கார்த்திகை மாதப்பிறப்பையொட்டி கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களிலும், பாதயாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் வந்தனர்.

பக்தர்கள் முடிகாணிக்கை, குழந்தையை கரும்புத்தொட்டிலில் சுமந்து சென்றும், அக்னிச்சட்டி தூக்கி வந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். கூட்டம் அலைமோதியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர்.

இதேபோல், இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோவில், போஜீஸ்வரர் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில், மண்ணச்ச நல்லூரில் உள்ள பூமிநாதசாமி கோவில், உள்ளிட்ட கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News