ஆன்மிகம்
குலசை முத்தாரம்மன்

குலசை முத்தாரம்மன் ஆலயத்தின் சிறப்புகள்

Published On 2021-10-23 02:30 GMT   |   Update On 2021-10-22 05:39 GMT
பொதுவாக சிவன் கோவில்களில் நந்தி இருக்கும். ஆனால் குலசையில் அம்மனுக்கே முக்கியத்துவம் என்பதால், மூலஸ்தானத்திற்கு எதிரே சிம்மம் உள்ளது.
பொதுவாக ஆலயங்களில் நடைபெறும் அனைத்து விழாக்களும் ஆன்மிகத்தை மட்டுமே முன்னிறுத்தியதாக இருக்கும். ஆனால் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் ஆலயத்தில் நடைபெறும் ‘தசரா திருவிழா’, கிராமிய கலைவிழா போன்று நடைபெறும்.

குலசையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும், மைசூர் பகுதியை ஆண்ட மன்னர்களுக்கும் முன்பு உறவு முறை ஏற்பட்டதாம். இதனால் தான் தசரா திருவிழா மைசூர் போலவே குலசையிலும் தோன்றியதாக சொல்கிறார்கள்.

சிவபெருமானுடன் சேர்ந்து அமர்ந்த கோலத்தில் அம்மன் இருக்கும் அரிய காட்சியை இந்த ஆலயத்தில் மட்டுமே தரிசிக்க முடியும். இறைவன்- ஞானமூர்த்தீஸ்வரர். அம்பாள்-
முத்தாரம்மன்.

குலசேகரன்பட்டினத்தில் வீரகாளியம்மன், பத்ரகாளியம்மன், கருங்காளியம்மன், முப்புடாரியம்மன், முத்தாரம்மன், உச்சினி மாகாளியம்மன், மூன்று முகம் கொண்ட அம்மன், வண்டிமறித்த அம்மன் என்று அட்டகாளிகளுக்கும் கோவில் உள்ளது.

பொதுவாக சிவன் கோவில்களில் நந்தி இருக்கும். ஆனால் குலசையில் அம்மனுக்கே முக்கியத்துவம் என்பதால், மூலஸ்தானத்திற்கு எதிரே சிம்மம் உள்ளது.

இங்கு நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்திப் பெற்றது. அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், பல்வேறு வேடங்களை போட்டுக் கொண்டு ஆலயத்திற்கு வருவார்கள்.

தசராத் திருவிழாவின் போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகையான இசைக் கருவிகளையும் பார்க்க முடியும்.

விஜயதசமியன்று நடக்கும் மகிஷாசூர வதம், முத்தாரம்மன் ஆலயத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்கரையில் நடைபெறும். கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது இந்த நிகழ்வு, ஆலயத்தின் முன்பாகவே நடத்தப்படுகிறது.

இங்குள்ள முத்தாரம்மன் சிலை, கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் உள்ள சிற்பியின் கனவில், அம்பாளே சென்று செய்யச் சொன்னதாக தல வரலாறு சொல்கிறது.

அம்மை நோயை தீர்க்கும் ஆற்றல் கொண்ட தெய்வம் என்பதால், இந்த அன்னைக்கு ‘முத்தாரம்மன்’ என்ற பெயர் வந்தது.

Tags:    

Similar News