ஆன்மிகம்
சதுரகிரி

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு தடை

Published On 2021-09-18 05:49 GMT   |   Update On 2021-09-18 07:54 GMT
கொரோனா நோய் தொற்று பரவாமல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் பிரசித்தி பெற்றது.

மலைமேல் உள்ள இந்த கோவிலுக்கு பவுர்ணமி, அமாவாசை, பிரதோ‌ஷம், சிவராத்திரி ஆகிய நாட்களில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேல் சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இன்று சனி பிரதோ‌ஷம், 20-ந் தேதி பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வருவதை தடுக்க மலைக்கோவிலுக்கு செல்ல இன்று முதல் வருகிற 21-ந் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு 20, மற்றும் 21-ந் தேதிகளில் பவுர்ணமியை முன்னிட்டு அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் கொரோனா நோய் தொற்று பரவாமல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தற்காலிக தடை விதித்து உத்தர விடப்படுகிறது. கோவில் பூஜைகள் பூசாரிகள் மூலம் வழக்கம் போல் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் யாரும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாணிப்பாறை மலை அடிவாரத்திற்கும் ஸ்ரீ சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கும் வருகை தர வேண்டாம். எனகூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News