ஆன்மிகம்
மருதமலை முருகன் கோவில் வாசலில் நின்று பக்தர்கள் வழிபாடு
மருதமலை முருகன் கோவில் மலைக்கு மேல் பக்தர்களை அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் மலைக்கு மேல் ஏறும் படிக்கட்டு கதவின் முன்பு நின்று வழிபட்டனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனாபரவல் காரணமாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் முக்கிய வழிபாட்டு தலங்களில் வழிபாடு செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. எனவே நேற்று மருதமலை முருகன் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சாமிக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
இதில் கோவில் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர். மலைக்கு மேல் பக்தர்களை அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் மலைக்கு மேல் ஏறும் படிக்கட்டு கதவின் முன்பு நின்று வழிபட்டனர். மேலும் அவர்கள், தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர். நேற்று முகூர்த்த தினம் என்பதால் மலை அடிவாரத்திலுள்ள திருமண மண்டபங்களில் மணமக்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களும் உறவினர்களும் மலைக்கு கீழே இருந்து வழிபாடு செய்தனர்.

இது குறித்து பக்தர்கள் கூறுகையில் கோவையில் கொரோனாவின் தாக்கம் குறைந்து கோவிலுக்குள் சென்று பக்தர்கள் வழிபடும் நிலை உருவாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டோம் என்றார்.