ஆன்மிகம்
திருப்பதி

திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ரூ.300 டிக்கெட்டுகள் வெளியிடுவது ஒத்திவைப்பு

Published On 2021-08-21 08:10 IST   |   Update On 2021-08-21 08:10:00 IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் வெளியிடப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருமலை :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக ஒவ்வொரு மாதமும் 20-ந்தேதி திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ரூ.300 டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன.

அதன்படி செப்டம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் நேற்று வெளியிடப்பட இருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரூ.300 டிக்கெட்டுகளை வெளியிடாமல் ஒத்தி வைத்துள்ளது. ரூ.300 டிக்கெட்டுகள் வெளியிடப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News