ஆன்மிகம்
சிறப்பு அலங்காரத்தில் வியூகசுந்தரராஜ பெருமாள்

கூடலழகர் பெருமாள் கோவில் பவித்ர உற்சவம்: சிறப்பு அலங்காரத்தில் வியூகசுந்தரராஜ பெருமாள்

Published On 2021-08-19 12:05 IST   |   Update On 2021-08-19 12:05:00 IST
மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம் தொடங்கியது, முதல் நாளான நேற்று ஸ்ரீதேவி பூதேவியுடன் வியூகசுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படும் 108 கோவில்களில் மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் 47-வதாக திகழ்கிறது. இந்த கோவிலில் ஆவணி மாதம் நடக்கும் பவித்ர உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

கொரோனா பரவல் காரணமாக போன வருடம் பவித்ர உற்சவம் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த வருடம் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் இந்த வருடம் பவித்ர உற்சவம் கோவில் உள்ளே உள்விழாவாக நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த வகையில் 17-ம் தேதி பவித்ர உற்சவம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் கலந்து கொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்த திருவிழாவின் முதல் நாளான நேற்று ஸ்ரீதேவி பூதேவியுடன் வியூகசுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.

Similar News