ஆன்மிகம்
மாரியம்மன் ரூபாய் நோட்டு அலங்காரத்திலும், முத்தாரம்மன் சிறப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்த காட்சி.

ஆடி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

Update: 2021-08-14 02:16 GMT
மாரியம்மன் கோவில் அபிஷேக பூஜைகளும், அலங்கார பூஜையும் நடந்தது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடத்தப்பட்டு, பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு வழிபாடுகளும் நடந்தன.
ஆடிமாத வெள்ளியையொட்டி மேட்டுப்பாளையம் நடூரில் உள்ள மகா மாரியம்மன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு திருமஞ்சனம், அரிசி மாவு, மஞ்சள் தூள், பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், தயிர், பழவகைகள், விபூதி சந்தனம் ஆகிய வாசனை திரவியங் களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து அம்மன் வெள்ளி கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மாலையில் நடந்த திருவிளக்கு பூஜையில் பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

மேட்டுப்பாளையம் அருண் நகரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. அதுபோன்று பாக்குகார தெரு மாகாளி யம்மன் கோவில், எல்.எஸ்.புரம் பேட்டை மகா மாரியம்மன் கோவில், காட்டூர் தவிட்டு மாரியம்மன் கோவில், கெண்டையூர் கருமாரியம்மன் லிங்கேஸ்வரர் கோவில், மைதானம் மாரியம்மன் கோவில், குஞ்சப்பனை மாரியம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் பூஜைகள் நடந்தன.

துடியலூர் அருகில் உள்ள வெள்ளக்கிணர், கவுண்டம்பாளையம், என்.ஜி.ஜி. காலனி, பன்னிமடை, தொப்பம்பட்டி, சின்னதடாகம், கணுவாய், இடையர்பாளையம் காளப்பநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

பேரூர் அருகே உள்ள பச்சாளையம் வீரமாஸ்தி அம்மன் கோவிலில் அலங்கார பூஜை செய்யப்பட்டு, தீபாராதனை வழிபாடுகள் நடந்தன.

இதேபோல், மாரியம்மன் கோவில் அபிஷேக பூஜைகளும், அலங்கார பூஜையும் நடந்தது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடத்தப்பட்டு, பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு வழிபாடுகளும் நடந்தன. இதில் பங்கேற்றவர்களுக்கு மஞ்சள் கயிறு, வளையல் ஆகியன வழங்கப்பட்டது.

மேலும், இங்குள்ள மாகாளியம்மன் கோவிலில் அபிஷேக வழிபாடு, திருவிளக்கு வழிபாடு மற்றும் அலங்கார பூஜைகள் அம்மன் கோவிலை சுற்றி உலா வருதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதுபோன்று வடிவேலம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், அம்மன் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை வழிபாடு நடந்தது.
Tags:    

Similar News