ஆன்மிகம்
முத்தாரம்மன்

கோவை சங்கனூர் ரோட்டில் உள்ள முத்தாரம்மன் கோவில் கொடை விழா தொடங்கியது

Published On 2021-07-29 06:47 GMT   |   Update On 2021-07-29 06:47 GMT
கோவை சங்கனூர் ரோட்டில் உள்ள ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் 18 -ம் ஆண்டு கொடை விழா முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
கோவை சங்கனூர் ரோட்டில் உள்ள ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் 18 -ம் ஆண்டு கொடை விழா நேற்று முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு நேற்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் பகல் 10.30 மணிக்கு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கம்பம் கோவிலை சுற்றி கொண்டு வரப்பட்டு நடப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக அரசின் வழிகாட்டுதல்படி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவில் நிர்வாகிகள் மற்றும் முக்கிய நபர்கள் மட்டும் கலந்து கொண்டனர். தொடர்ந்து கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி, பூஜை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து வருகிற 2 -ந் தேதி இரவு 8 மணிக்கு வேல்கனி, சேர்மத்துரை குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சியும், அன்று இரவு 12 மணிக்கு அம்மையப்பனுக்கு குடியழைப்பு பூஜையும் நடக்கிறது. 3 -ந் தேதி காலை 10 மணிக்கு தீர்த்தம் கொண்டு வருதலும், அன்று மதியம் 12 மணிக்கு 18 -ம் ஆண்டு கொடை விழா, அலங்கார பூஜை தீபாராதனையும் நடைபெறும். மதியம் 1 மணிக்கு பிரசாதம் வழங்கப்படும். அதனைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு வில்லிசையும், 12 மணிக்கு அம்மையப்பனுக்கு சாமகொடை மற்றும் வாணவேடிக்கையும் நடக்கிறது. 3 -ந் தேதி காலை 10 மணிக்கு பொங்கல் வைத்து அம்மையப்பனுக்கு மறுபூஜை நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக கோவில் கொடை விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
Tags:    

Similar News