ஆன்மிகம்
சுவாமி வெண்ணெய் தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆடி திருவிழா: சவுந்தரராஜ பெருமாளுக்கு வெண்ணெய் தாழி அலங்காரம்

Published On 2021-07-21 05:10 GMT   |   Update On 2021-07-21 05:10 GMT
வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி திருவிழாவின் 5-ம் நாளான நேற்று சுவாமி வெண்ணெய் தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் தொடர்ந்து 13 நாட்கள் ஆடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பக்தர்கள் இன்றி கோவிலில் ஆடி திருவிழா 16-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக கொடிமரம் முன்பு ஸ்ரீதேவி, பூமாதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளினார். அப்போது பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து அனுமார் வாகனத்தில் பெருமாள் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் இன்றி கொடியேற்றம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆடி திருவிழாவின் 5-ம் நாளான நேற்று சுவாமி வெண்ணெய் தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் வருகிற 22-ந்தேதியும், முத்துப்பல்லக்கு ஊர்வலம் 26-ந்தேதியும் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News