ஆன்மிகம்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடத்த கோரிக்கை

Published On 2021-07-13 11:46 IST   |   Update On 2021-07-13 11:46:00 IST
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோவில்களில் பக்தர்கள் அர்ச்சனைகள், சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடத்த அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் கோவிலில் பக்தர்கள் அர்ச்சனைகள், சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடத்த அனுமதி இல்லை.

இதனால் சிறப்பு யாக பூஜைகளுக்கு பிரசித்திப்பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது. சிறப்பு பூஜைகள், யாகங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து திருக்கடையூரை சேர்ந்த சமூக ஆர்வலர் வைத்தியநாதன் கூறுகையில், ‘அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.

இங்கு பக்தர்கள் நலனுக்காக ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், பீமரத சாந்தி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடைபெறும். இதன் மூலமாக கோவில் அருகே பூ, தேங்காய், பழம் வியாபாரம் செய்பவர்கள், புகைப்பட, வீடியோ கலைஞர்கள், நாதஸ்வர கலைஞர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் வருமானம் கிடைக்கும். எனவே கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் மேற்கண்ட சிறப்பு யாகங்கள், பூஜைகளை நடத்த அனுமதிக்க வேண்டும்’ என்றார்.

Similar News