ஆன்மிகம்
மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி
கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி மதுரை மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவில்களில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிப்படுகிறார்கள்.
தமிழகத்தில் இன்று முதல் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி வழிபாட்டுத்தலங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் வழிபாட்டுத்தலங்கள் தயார்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் மீனாட்சி அம்மன் கோவில், இம்மையிலும் நன்மை தருவார் கோவில், தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், முக்தீஸ்வரர் கோவில், கூடலழகர் பெருமாள் கோவில், தல்லாகுளம் பெருமாள் கோவில், திருமோகூர் காளமேக பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
இதுகுறித்து மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் வழிபாட்டிற்காக இன்று காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனத்திற்கு அம்மன் சன்னதி கிழக்கு நுழைவு வாயில் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ரூ.100, ரூ.50 விரைவு தரிசன கட்டணசீட்டு பெறும் பக்தர்கள் தெற்கு கோபுர நுழைவு வாயில் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேற்கு மற்றும் வடக்கு நுழைவுவாயில் வழியாக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும். கோவிலின் தெற்கு, கிழக்கு அம்மன் வாசலில் வெப்பநிலை பரிசோதனைக்குப்பின் கிருமி நாசினியை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்திய பின்பே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
10 வயதிற்கு குறைவானவர்கள், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க கேட்டு கொள்ளப்படுகிறது. கோவிலில் நடக்கும் காலபூஜைகள் மற்றும் அபிஷேகங்களை காண பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு எந்த ஒரு இடத்திலும் உட்கார அனுமதி கிடையாது. பக்தர்கள் கோவிலுக்குள் தேங்காய், பழம், கொண்டு தடை செய்யப்பட்டுள்ளது. அர்ச்சனை செய்வதற்கு அனுமதி இல்லை. கோவிலுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் வழக்கம்போல் நிர்வாகத்தின் மூலம் இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மதுரை மேலமாசி வீதியில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கூடலழகர் பெருமாள் கோவிலில் காலை 7 மணி முதல் பிற்பகல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.