ஆன்மிகம்
ரிஷப வாகனத்தில் காட்சி அளித்த ஜெனகை மாரியம்மன்

ரிஷப வாகனத்தில் காட்சி அளித்த ஜெனகை மாரியம்மன்

Published On 2021-06-28 10:12 IST   |   Update On 2021-06-28 10:12:00 IST
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் நேற்று அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் 14-ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் வைகாசி பெருந்திருவிழா தொடங்கியது. 17 நாட்கள் திருவிழா தொடர்ந்து நடைபெறுகிறது. கொரோனா தொற்று நோய் காரணமாக கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அரசு உத்தரவுப்படி கோவில் வளாகத்தில் திருவிழா நடைபெறுகிறது.

இதையொட்டி 2-ம் நாள் 17-ம் தேதி திருவிழா மேட்டுத்தெரு கிராமமக்களால் கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு ஜெனகை மாரியம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சண்முகம் அர்ச்சகர் பூஜைகள் செய்தார்.

21-ம் தேதி 6-ம் நாள் திருவிழா நடைபெற்றது. இதில் ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஜெனகை மாரியம்மன் எழுந்தருளினார். இந்த திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்று வருகிறது.

23-ம் தேதி 9-ம் திருவிழா நடைபெற்றது. இதில் கோவில் பூசாரி அக்னிசட்டி எடுத்து வந்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.. இதில் கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்நிலையில் 13-ம் நாள் திருவிழாவான நேற்று அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார். இதில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.

Similar News