ஆன்மிகம்
கள்ளழகர் கோவில்

கள்ளழகர் கோவிலில் முப்பழம் உற்சவம்: பக்தர்கள் இன்றி நடந்தது

Published On 2021-06-26 14:34 IST   |   Update On 2021-06-26 14:34:00 IST
மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா மற்றும் வைகாசி மாதம் நடைபெறும் வசந்த உற்சவ விழாக்கள் கொரோனா ஊரடங்கால் கோவில் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடந்து முடிந்தது.
மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா மற்றும் வைகாசி மாதம் நடைபெறும் வசந்த உற்சவ விழாக்கள் கொரோனா ஊரடங்கால் கோவில் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடந்து முடிந்தது.

இதைத் தொடர்ந்து ஆனி மாதம் பவுர்ணமி அன்று நடைபெறும் முப்பழ உற்சவமும் பக்தர்கள் இன்றி நேற்று மாலையில் நடந்தது. இதில் மூலவர் கள்ளழகர் சுந்தர ராஜ பெருமாள் மற்றும் தேவியர்களுக்கும், உற்சவர் சுவாமிக்கும் பட்டர்களின் வேதமந்திரங்கள், மேளதாளம் முழங்க தீபாராதனைகள் நடந்தன. முன்னதாக சுவாமிக்கு முன்பாக மா, பலா, வாழை ஆகிய முப்பழங்கள் வைத்து படைக்கப்பட்டது.

அப்போது சர்வ அலங்காரத்தில் சுவாமி தேவியர்களுடன் காட்சி தந்தார். ஊரடங்கின் காரணமாக பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. கோவில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Similar News