ஆன்மிகம்
காரைக்கால் அம்மையார் கோவிலில் மாம்பழங்கள் இறைப்பு நடைபெற்ற போது எடுத்த படம்.

மாங்கனி திருவிழா: காரைக்கால் அம்மையார் கோவிலில் மாம்பழங்கள் இறைப்பு

Published On 2021-06-25 07:51 GMT   |   Update On 2021-06-25 07:51 GMT
காரைக்கால் மாங்கனி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மாம்பழங்கள் இறைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை பக்தர்கள் இணையதளத்தில் தரிசித்தனர்.
இறைவனின் திருவாயால் ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரியவரும், 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவருமான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூரும் வகையில் காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக, இந்த கோவில் பிரகாரத்தில் மாங்கனித் திருவிழா எளிமையாக நடைபெற்றது. அதேபோல் இந்த ஆண்டும் தொற்று காரணமாக மாங்கனித் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக பக்தர்கள் மாங்கனி இறைப்பு நேற்று நடந்தது. முன்னதாக கைலாசநாதர் கோவில் பிரகாரத்தில் பரமசிவன் பிச்சாண்டவர் கோலத்தில் பிரகார உலா நடைபெற்றது. அப்போது மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சி எளிமையாக நடைபெற்றது. ஆனால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிகழ்ச்சி யூ-டியூப் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு தரிசித்தனர்.

தொடர்ந்து மதியம் 1 மணிக்கு காரைக்கால் அம்மையார் பிச்சாண்டவருக்கு அமுதுபடைத்தார். மதியம் 2 மணிக்கு மேல் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். விழாவில் நேற்று இரவு பரமதத்தருக்கு 2-வது திருமணம், அதை தொடர்ந்து, புனிதவதியார் புஷ்ப பல்லகில் செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் எளிமையாக நடைபெற்றது.

இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை, அம்மையாருக்கு இறைவன் காட்சி தருகிறார்.
Tags:    

Similar News