ஆன்மிகம்
பாகூர் சிவன் கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு

பாகூர் சிவன் கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு

Published On 2021-06-24 07:51 GMT   |   Update On 2021-06-24 07:51 GMT
தேர்த்திருவிழாவையொட்டி பஞ்சமூர்த்திகளுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் கோவில் உள்புறப்பாடு வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பாகூரில் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக தேர்த்திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக கோவில் உள்ளேயே நடைபெற்றது. இந்த ஆண்டும் கொரோனா தொற்று இருப்பதால் கடந்த ஆண்டு போலவே 10 நாட்களாக திருவிழா நடைபெற்றது.

நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழாவையொட்டி பஞ்சமூர்த்திகளுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் கோவில் உள்புறப்பாடு வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் குறைந்த அளவிலேயே பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அர்ச்சகர்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News