ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

திருப்பரங்குன்றத்தில் ஆனி மாத பவுர்ணமி கிரிவலம் ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

Published On 2021-06-24 10:45 IST   |   Update On 2021-06-24 10:45:00 IST
தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் நாளை (24-ந்தேதி) ஆனி மாதம் நடைபெறும் பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்படுவதாக கோவில் துணை ஆணையர் ராமசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம்  முருகன் கோவிலில் ஆனி மாதம் நடைபெறும் பவுர்ணமிகிரிவலம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமி  கிரிவலம் சிறப்பு வாய்ந்ததாகும்.

இங்கு மலையே சிவன் வடிவில் காட்சியளிப்பதால் மதுரை மட்டுமல்லாது விருது நகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமியை தரிசனம் செய்வார்கள்.

தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் இன்று (24-ந்தேதி) ஆனி மாதம் நடைபெறும் பவுர்ணமிகிரிவலம்
ரத்து செய்யப்படுவதாக கோவில் துணை ஆணையர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

எனவே மேற்கண்ட நாளில் பக்தர்கள் யாரும் திருப்பரங்குன்றத்திற்கு கிரிவலம் வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Similar News