ஆன்மிகம்
நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

Published On 2021-06-23 11:23 IST   |   Update On 2021-06-23 11:23:00 IST
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மாதந்தோறும் வரும் பிரதோஷ நாட்களில் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளது. கோவிலில் நடக்கும் அனைத்து விழாக்களும் உள் விழாவாக நடத்த அரசு உத்தரவுபிறப்பித்துள்ளது.

இதன் காரணமாக கோவில்களில் நடக்கும் விழாக்கள் பக்தர்கள் இன்றி நடைபெற்று வருகிறது. நேற்று
பிரதோஷத்தை முன்னிட்டு அனைத்து சிவன் கோவில்களிலும் சிவனுக்கும், நந்திக்கும் பல்வேறு பொருட்களால் அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று
பிரதோஷ
த்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கோவிலின் வெளியில் நின்று வழிபாடு செய்தனர்.

Similar News