ஆன்மிகம்
சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தபோது எடுத்த படம்.

7-ம் நாள் ஆனித்திருவிழா: நெல்லையப்பர் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜை

Published On 2021-06-22 15:13 IST   |   Update On 2021-06-22 15:13:00 IST
நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா 7-ம் நாளான நேற்று சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இந்த திருவிழா வருகிற 24-ந்தேதி வரை நடைபெறுகிறது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 15-தேதி தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேக வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

18-ம்தேதி உற்சவர் இருப்பிடத்தில் கும்பம் வைத்து, வேள்வி செய்து, சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாலையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடைபெற்றது.

ஆனிப்பெருந்திருவிழாவின் 7-ம் நாளான நேற்று சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இந்த திருவிழா வருகிற 24-ந்தேதி வரை நடைபெறுகிறது.

Similar News