ஆன்மிகம்
காரைக்கால் அம்மையார்

காரைக்கால் மாங்கனி திருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2021-06-21 08:32 GMT   |   Update On 2021-06-21 08:32 GMT
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி விழா முழுவதும் கோவிலுக்குள்ளே நடந்து முடிந்தது. அதேபோல் இந்த ஆண்டும், கோவிலுக்குள்ளேயே விழாவை நடத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இறைவனின் (பரமசிவன்) திருவாயால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். அவரது வாழ்க்கை வரலாற்றை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் காரைக்காலில் 5 நாட்கள் மாங்கனி திருவிழா நடைபெறும். இந்த மாங்கனி திருவிழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால், பக்தர்கள் இன்றி விழா முழுவதும் கோவிலுக்குள்ளே நடந்து முடிந்தது. அதேபோல் இந்த ஆண்டும், கொரோனாவை காரணம் காட்டி கோவிலுக்குள்ளேயே விழாவை நடத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று (திங்கட்கிழமை) மாலை மாப்பிள்ளை அழைப்புடன் விழா தொடங்குகிறது. 22-ந் தேதி காலை திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், 23-ந் தேதி மாலை பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும், 24-ந் தேதி காலை கோவில் உள்ளேயே பிச்சாண்டவர் வீதியுலா புறப்பாடும், மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சியும், 25-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அம்மையாருக்கு, இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

இந்த 5 நாள் விழாவில், பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மாறாக, கோவில் உபயதாரர்கள், அறங்காவல் குழுவினர், முக்கியஸ்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர் என கூறப்படுகிறது.

இந்தநிலையில் காரைக்கால் மாவட்ட இந்து முன்னணியினர், மாவட்ட தலைவர் விஜயன் தலைமையில், காரைக்கால் அம்மையார் கோவில் அருகே மாங்கனி திருவிழா நிகழ்ச்சியில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். சமூக இடைவெளி, முக கவசம் மற்றும் அரசு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பக்தர்களின் பங்களிப்போடு விழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Tags:    

Similar News