ஆன்மிகம்
இரும்பாடி முத்தாலம்மன்

இரும்பாடி முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2021-06-21 12:09 IST   |   Update On 2021-06-21 12:09:00 IST
முத்தாலம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர் உள்பட 12 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பொங்கல் வைத்து சிறப்பு அர்ச்சனை நடந்தது.
சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன்கோவில் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவிலில் வைகாசி திருவிழா நடத்த முடியவில்ைல. இதனால் கிராம மக்கள் தெய்வ குற்றம் இருப்பதாக கருதினார்கள். விழா கமிட்டியினரும் திருவிழா இல்லாமல் எளிமையாக பூஜை நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி கொரோனா தொற்று நோயிலிருந்து இருந்து மக்களை காப்பாற்ற வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் முத்தாலம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர் உள்பட 12 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பொங்கல் வைத்து சிறப்பு அர்ச்சனை நடந்தது. பூசாரி ராமசாமி பூஜைகள் செய்தார். சக்திவேல், நாகமணி, வரதராஜன், குமார் பாபு, அர்ஜுனன் உள்ளிட்ட விழா கமிட்டியினர் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டனர்.

Similar News