ஆன்மிகம்
சிவலிங்கம்

மரகத லிங்கத்தை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

Published On 2021-06-19 03:41 GMT   |   Update On 2021-06-19 15:08 GMT
மரகத கல்லை லிங்கமாக செய்து வழிபடலாம். புதனுக்கு உரிய மரகதத்தை லிங்கவடிவில் வழிபடுவது மிக சிறந்தபலனை அளிக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
மரகத லிங்கத்தை இந்திரன் வழிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு மரகதலிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும் என்பது முன்னோர் வாக்கு.

நவகிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. எனவே, மரகத லிங்கத்தை வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தை, கேட்டவுடன் பெற முடியும் என சில ஆன்மிக நூல்களில் கூறப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு ஆக்ரஷ்ன சக்தி உண்டு. அந்த வகையில் புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தைப் பெறலாம்.

கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை மரகத லிங்கம் தரக்கூடிய வல்லமை படைத்தது. இதுமட்டுமின்றி வியாபாரத்தில் விருத்தி அம்சம் பெறவும், சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற முடியும்.

மரகதலிங்கத்தை வணங்குவதால் கல்வி, பதவி, போன்றவற்றில் சிறந்து விளங்கலாம். சகல தோஷங்களும் இவ்வழிபாட்டினால் நீங்கும். மரகத லிங்கத்துக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது.

அரிய வகை மரகத லிங்கங்கள், மாணிக்க லிங்கங்கள், கருநீல லிங்கங்கள், கனக புஷ்பராக லிங்கங்கள் என பலவகை லிங்கங்கள் உள்ளது.
Tags:    

Similar News