ஆன்மிகம்
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன்

3-ம் நாள் ஊஞ்சல் திருவிழா: சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன்

Published On 2021-06-18 04:57 GMT   |   Update On 2021-06-18 04:57 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்றுவரும் ஊஞ்சல் உற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார்.
கொரோனா பரவலை தடுக்க எடுத்த நடவடிக்கைகளில் ஒன்றான ஊரடங்கு, கடந்த மாதத்தில் இருந்து தற்போது வரை அமலில் இருந்து வருகிறது. இதனால் கோவிலில் தரிசனமும் விழாக்களும் ரத்து செய்யப்பட்டன.
 
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களிலும் திருவிழா நடைபெற்றாலும், அதில் சித்திரை, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, தை, மாசி மாத விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் ஆனிமாத ஊஞ்சல் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா கோவில் உள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த திருவிழாவின் 2-ம் நாளான நேற்று முன்தினம் ஊஞ்சலில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், பிரியாவிடை எழுந்தருளினர். இந்த விழாவில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

ஊஞ்சல் உற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார்.
Tags:    

Similar News