ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் தொடங்கியது
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் வருகிற 18-ந் தேதி வரை நடைபெறுகிறது.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம்ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் தொடங்கியது. இந்த வசந்த உற்சவம் வருகிற 18-ந் தேதி வரை நடைபெறுகிறது.
வசந்த உற்சவத்தின் முதல் நாளான நேற்று மாலை 6 மணிக்கு ஸ்ரீரங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபம் வந்து சேர்ந்தார்.
அங்கு அலங்காரம், அமுது கண்டருளிய பின் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பின்னர் ஸ்ரீரெங்கநாச்சியார் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.