ஆன்மிகம்
கெங்கையம்மன்

குடியாத்தம் அருகே கெங்கையம்மன் திருவிழா

Published On 2021-06-17 09:08 IST   |   Update On 2021-06-17 09:08:00 IST
குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவின் போது குறைந்து அளவு பக்தர்கள் கலந்து கொண்டு கொரோனோ விதிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்து, சமூக இடைவெளிகளை பின்பற்றி விழா நடைபெற்றது.
குடியாத்தம் அருகே கஸ்பா கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா புகழ்பெற்றது. தற்போது கொரோனோ ஊரடங்கு அமலில் உள்ளதால் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் கோவில் வளாகத்தில் வைத்து திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று நள்ளிரவு அலங்கரிக்கப்பட்ட கெங்கையம்மன் சிரசுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டபின் கோவில் வளாகத்தை சுற்றி வந்தது. பின்னர் சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்ட கெங்கையம்மன் சிரசுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் கண் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியின்போது குறைந்து அளவு பக்தர்கள் கலந்து கொண்டு கொரோனோ விதிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்து, சமூக இடைவெளிகளை பின்பற்றி விழா நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்தில் இந்த விழா முடிவு பெற்றது.

தாசில்தார் வத்சலா தலைமையில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

Similar News