ஆன்மிகம்
திருப்பதி தங்க தேரோட்டம்

திருப்பதியில் ஆண்டு முழுவதும் நடக்கும் விழாக்கள்

Published On 2021-06-12 11:47 IST   |   Update On 2021-06-12 11:47:00 IST
ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் ரதசப்தமி (மகா சுத்த சப்தமி) என்ற திருவிழா மிகவும் விசேஷமானது. எல்லாவற்றையும் விட ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா மிகவும் முக்கியமான விழாவாகக் கருதப்படுகின்றது.
திருமலையில் வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, ஜன்மாஷ்டமி போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் ரதசப்தமி (மகா சுத்த சப்தமி) என்ற திருவிழா மிகவும் விசேஷமானது. இந்த சமயத்தில் 7 வாகனங்களில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு நான்கு மாடவீதிகளில் தேரில் எடுத்துச் செல்லப்படுகிறார். பக்தர்களுக்குக் காணக் கிடைக்காத காட்சியாகும். எல்லாவற்றையும் விட ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா மிகவும் முக்கியமான விழாவாகக் கருதப்படுகின்றது.

பிரம்மனே இங்கு வந்து முன்னின்று இந்த உற்சவத்தை நடத்துவதாக ஐதீகம். இந்த உற்சவத்தின் போது திருமலை வண்ண வண்ண விளக்குகளின் அலங்காரத்துடன் சுவாமி சேவை சாதிக்கிறார். இந்த நேரத்தில் ஒரு வாரத்துக்குள் 6 லட்சம் முதல் 10 லட்சம் பக்தர்கள் திருமலைக்கு வந்து குவிகின்றனர். இங்கு புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோத்ஸவம் காணக்கிடைப்பதரிது. இந்த விழாவில் கலந்துகொண்டு வேங்கடவனைச் சேவிப்பவர்களின் சகல பாவங்களும் தொலைகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Similar News