ஆன்மிகம்
குறவலூர், உக்கிர நரசிம்மர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
குறவலூர் உக்கிரநரசிம்மர் கோவிலில் நரசிம்மருக்கு பால், பன்னீர், இளநீர் தயிர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
திருவெண்காடு அருகே பஞ்சநரசிம்மர் கோவில்கள் உள்ளன. அதாவது மங்கைமடத்தில் வீரநரசிம்மர், குறவலூர் உக்கிரநரசிம்மர், திருநகரியில் யோக மற்றும் இரணிய நரசிம்மர்கள் மற்றும் திருவாளியில் லட்சுமி நரசிம்மர் என ஐந்து நரசிம்மர் ஆகும்.
நேற்று வைகாசி மாத அமாவாசையையொட்டி குறவலூர் உக்கிரநரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதனையொட்டி நரசிம்மருக்கு பால், பன்னீர், இளநீர் தயிர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் பக்தர்கள் இன்றி இந்த வழிபாடு நடந்தது.