ஆன்மிகம்
திருச்சானூர் பத்மாவதி தாயார்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்கள் இன்றி தெப்போற்சவம்

Published On 2021-06-10 13:43 IST   |   Update On 2021-06-10 13:43:00 IST
கொரோனா பரவலால் தேவஸ்தானம் கோவிலில் உற்சவங்களை பக்தர்களின்றி தனிமையில் நடத்தி வருகிறது. அதன்படி பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவமும் தனிமையில் நடைபெற உள்ளது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆனி மாத பவுர்ணமியையொட்டி தேவஸ்தானம் 5 நாட்கள் வருடாந்திர தெப்போற்சவத்தை நடத்துவது வழக்கம்.

அதன்படி இம்மாதம் 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை வருடாந்திர தெப்போற்சவத்தை நடத்த திட்டமிட்டுள்ளது.

கொரோனா பரவலால் தேவஸ்தானம் கோவிலில் உற்சவங்களை பக்தர்களின்றி தனிமையில் நடத்தி வருகிறது. அதன்படி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவமும் தனிமையில் நடைபெற உள்ளது.

Similar News