ஆன்மிகம்
பரமத்திவேலூர் பகுதியில் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

பரமத்திவேலூர் பகுதியில் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

Published On 2021-06-09 11:09 IST   |   Update On 2021-06-09 11:09:00 IST
பரமத்திவேலூர் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகபெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பூஜையின் போது அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் நடந்தது.
பரமத்திவேலூர் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி மாத கிருத்திகையை யொட்டியும், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையிலும் முருகபெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பூஜையின் போது அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் நடந்தது.

இதேபோல் பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவில் சுப்பிரமணியர், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியர், நன்செய் இடையார் திருவேலிசுவரர் கோவில் முருகன், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனியாண்டவர், அருணகிரிமலை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், வேலூர் சக்திநகர் முருகன், பேட்டை பகவதியம்மன் கோவில் முருகன் உள்ளிட்ட கோவில்களிலும் வைகாசி மாத கிருத்திகையை யொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

Similar News