ஆன்மிகம்
முருகன் பூஜை

திருமலைக்கேணி முருகன் கோவிலில் கார்த்திகை பூஜை

Published On 2021-06-09 09:12 IST   |   Update On 2021-06-09 09:12:00 IST
நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில், முருகப்பெருமானுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது.
நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில், வைகாசி மாத கார்த்திகை பூஜை நடந்தது. இதில் முருகப்பெருமானுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசாமி அருள்பாலித்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக, சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதேபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள தண்டபாணி சன்னதியிலும் கார்த்திகை பூஜை நடந்தது.

Similar News