ஆன்மிகம்
வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தேருக்கு கூடாரம்

வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தேருக்கு கூடாரம்

Published On 2021-05-17 11:32 IST   |   Update On 2021-05-17 11:32:00 IST
அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீரம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் தேரோட்டம் விமரிசையாக நடைபெறும்.
அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீரம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். இந்த கோவிலில் இருந்த 400 ஆண்டு பழமையான தேர் சேதமடைந்ததால், ரூ.80 லட்சத்தில் புதிய தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடந்தது.

இதையடுத்து புதிய தேர் சேதமடையாமல் இருக்க கூடாரம் அமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து நிரந்தர கூடாரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.14 லட்சம் செலவில் இரும்பிலான கூடாரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

Similar News