ஆன்மிகம்
வழிபாடு

மனதில் பதித்துக்கொள்ள வேண்டிய மகத்தான தினங்கள்

Published On 2021-05-16 02:30 GMT   |   Update On 2021-05-15 08:01 GMT
ஒவ்வொரு ஆண்டும் தொடங்குகின்ற பொழுதே முக்கிய தினங்களைக் குறித்துவைத்துக் கொண்டு செயல்படவேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் தொடங்குகின்ற பொழுதே முக்கிய தினங்களைக் குறித்துவைத்துக் கொண்டு செயல்படவேண்டும். குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி, கிரகண நாட்கள், கிரிவல நாட்கள், முன்னோர்களின் திதி தினங்கள், சிவராத்திரி, மகான்கள் பிறந்த தினங்கள், நமது பிறந்த நட்சத்திர தினங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் பிறந்த தினங்கள், திருமணத் தேதிகள், ராமநவமி, கோகு லாஷ்டமி, வருடப்பிறப்பு, மாதப்பிறப்பு, ஏகாதசி, சஷ்டி, பிரதோஷம் போன்றவற்றை மனதில் பதித்து வைத்துக்கொண்டு, அந்தப்புண்ணிய நாட்களில் நல்ல எண்ணங்களோடு செயல்பட்டு இறைவனையும், முன்னோர்களையும் நினைத்து வழிபடவேண்டும்.

அந்த நாட்களில் ஏழை, எளிய மக்களுக்கு உணவளிக்கலாம். முதியவர்களுக்கு ஆடை தானம் வழங்கலாம். வசதியில்லாத குழந்தைகளின் கல்விக்காக உதவலாம். கல்யாணக் கனவுகளையும் நிறைவேற்ற ஒரு தொகையை நிதிஉதவி செய்யலாம். அன்றைதினம் ஏதேனும் ஒரு நல்ல காரியமாவது நீங்கள் செய்தால், அந்த நல்ல காரியத்தால் உங்கள் வாழ்க்கையில் உன்னதமான பலன் கிடைக்கும்.
Tags:    

Similar News