ஆன்மிகம்
கும்பகோணம் 12 கருட சேவை விழா(பழைய படம்)

கும்பகோணத்தில் நாளை அட்சய திருதியையொட்டி நடைபெற இருந்த 12 கருட சேவை விழா ரத்து

Published On 2021-05-13 08:07 GMT   |   Update On 2021-05-13 08:07 GMT
கும்பகோணத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அட்சய திருதியை நாளில் 12 பெருமாள் கோவில்களில் இருந்து கருட வாகனத்தில் பெருமாள் சுவாமிகள் வீதி உலாவாக எழுந்தருளுவது வழக்கம்.
சுவாமிமலை :

கும்பகோணத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய தெருவில் அட்சய திருதியை நாளில் 12 பெருமாள் கோவில்களில் இருந்து கருட வாகனத்தில் பெருமாள் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலாவாக புறப்பட்டு எழுந்தருளுவது வழக்கம்.

இதற்காக பெரிய தெருவில் விழா பந்தல் அமைக்கப்பட்டு, அங்கு ஒவ்வொரு கோவில் பெருமாளும் பக்தர்களுக்கு ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் காட்சியளிப்பர். இந்த பெருமாள் சுவாமிகளுக்கு எதிரே ஆஞ்சநேயரும் எழுந்தருளுவது வழக்கம்.

கும்பகோணத்தில் சிறப்பாக நடைபெறும் இந்த 12 கருட சேவை நிகழ்ச்சியின் போது ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தும், அங்குள்ள நகை கடைகளில் பொன், பொருளை வாங்கிச் செல்வதும் வாடிக்கை.

இந்தாண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக அட்சய திருதியான நாளை (14-ம் தேதி) நடைபெறவிருந்த 12 கருட சேவை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News