ஆன்மிகம்
நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2021-05-06 10:38 IST   |   Update On 2021-05-06 10:38:00 IST
நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தையொட்டி சிவகாமசுந்தரி உடனுறை நடராஜ பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தையொட்டி சிவகாமசுந்தரி உடனுறை நடராஜ பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சாமிக்கு பால் மற்றும் பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

இதைத்தொடர்ந்து சரக்கொன்றை, சாமந்தி, கிருஷ்ண கமலம் உள்ளிட்ட பல்வேறு மலர்களால் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் மகாதீபாராதனை நடந்தது. சித்திரை மாத திருவோண நட்சத்திரைத்தையொட்டி பரமத்திவேலூர் பேட்டையில் உள்ள திருஞானசம்பந்தர் மடாலத்திலும் நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

Similar News