ஆன்மிகம்
பெண்கள் தங்களது வீட்டு வளாகத்தில் பொங்கலிட்டதை படத்தில் காணலாம்.

பத்துக்காணி காளி கோவிலில் பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்

Published On 2021-04-28 06:37 GMT   |   Update On 2021-04-28 06:37 GMT
இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் பத்துகாணி காளி மலையில், சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.
குமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா பத்துகாணியில் காளிமலை அமைந்துள்ளது. இது தரை மட்டத்திலிருந்து 3000 அடி உயர மலையில் காளி கோவில் உள்ளது. திருவிதாங்கூர் மன்னர்களால் கோவில் பராமரிப்புக்காக சுமார் 200 ஏக்கர் நிலம் ஆதிவாசிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதிவாசிகளால் இந்த கோவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

காளிமலையில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி மற்றும் துர்காஷ்டமி தினங்களில் சிறப்பு பூஜை மற்றும் திருவிழாக்கள் நடைபெறுகிறது.

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் மலையேறி பொங்கலிட்டு வழிபடுகின்றனர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் கோவில் வளாகத்தில் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

பெண்கள் தங்கள் வீடுகளில் பொங்கலிட்டு வழிபடுவதற்கு பக்தர்கள் சங்கம் மற்றும் கோவில் நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். இதனால் நூற்றுக்கணக்கான பெண்கள் தங்கள் வீடுகளில் பொங்கலிட்டு வழிபட்டனர். மேலும் பக்தர்கள் இன்றி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
Tags:    

Similar News