ஆன்மிகம்
பத்ரகாளியம்மன்

பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா: கரகம் எடுத்து வந்த பக்தர்கள்

Published On 2021-04-10 10:09 IST   |   Update On 2021-04-10 10:09:00 IST
பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில் பொங்கல் வைத்தல், சக்தி கரகம், முளைப்பாரி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். முளைப்பாரி ஊரணியில் கரைக்கப்பட்டது.
சிங்கம்புணரி அருகே பிரான்மலை செல்லும் சாலையில் கிருங்காக்கோட்டையில் பத்ரகாளி அம்மன் கோவிலில் கடந்த 31-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிறைவு நாளான நேற்று பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. பின்னர் பொங்கல் வைத்தல், சக்தி கரகம், முளைப்பாரி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். முளைப்பாரி ஊரணியில் கரைக்கப்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிருங்காக்கோட்டை நாடார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.

Similar News