ஆன்மிகம்
சூலூரில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா

சூலூரில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2021-04-01 04:11 GMT   |   Update On 2021-04-01 04:11 GMT
சூலூரில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் ஆர்.வி.எஸ்.கல்வி நிறுவன வளாகத்தில் சூலூர் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உள்ளது. இங்கு பூதேவி, ஸ்ரீதேவியுடன் திருமால், மகாசரஸ்வதி, ஆஞ்சநேயப் பெருமான், கருடாழ்வாருக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பத்மாவதி தாயாருக்கு புதிய சன்னதியும், ஆழ்வார்கள் ஆச்சாரியார்களுக்கு தனி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலின் 2-வது கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு நான்காம் கால வேள்வியும், தொடர்ந்து பாலகர் வழிபாடு, தீபாராதனை, சுப தானங்கள், குடங்கள் புறப்பாடும் நடைபெற்றது. பின்னர் கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடந்தது. இதனை உ.வே செந்தாமரைகண்ணன் சுவாமிகள் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என்ற கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து சுவாமிக்கு அலங்காரம், சிறப்பு படையல், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News